இரிடியம் மோசடி: 4 பேர் சிக்கினர்
திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் இரிடியம் விற்பனை மோசடி தொடர்பான தகராறில், நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நேற்று முன் தினம், நான்கு பேர் தகராறு செய்து கொண்டிருந்தனர். போலீசார் விசாரணை நடத்தினர். இரிடியம் விற்பனை தொடர்பான தகராறு என்பது தெரிய வந்தது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நேற்று முன் தினம், நான்கு பேர் தகராறு செய்து கொண்டிருந்தனர். போலீசார் விசாரணை நடத்தினர். இரிடியம் விற்பனை தொடர்பான தகராறு என்பது தெரிய வந்தது.
ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த சீனிமுகமது என்பவருக்கு திருவண்ணாமலையை சேர்ந்த ரவி என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
இரிடியம் விற்பனை செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என, சீனிமுகமது கூறியுள்ளார். அதை நம்பிய ரவி, அவரிடம் சில லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இதேபோல, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மணிகண்டன், மதுரை அன்பழகன் ஆகியோரிடமும் சீனிமுகமது பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். ஏமாற்றப்பட்ட மூவரும், சீனிமுகமதுவிடம் தகராறு செய்த நிலையில் போலீசிடம் சிக்கியுள்ளனர். நான்கு பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!