நெல்லையை சேர்ந்தவர் நகை வியாபாரி சுஷாந்த் (40). இவர் இன்று( மே 30) காலை நகைகள் வாங்குவதற்காக கேரள மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு காரில் 2 பேருடன் சென்றுள்ளார். நெல்லையிலிருந்து இவரது காரை தொடர்ந்து முன்னும் பின்னும் இரண்டு கார்கள் வந்துள்ளன.
நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலத்தில் வரும் போது, கார்களில் முகமூடி கும்பல் சுஷாந்தின் காரை வழி மறித்து நிறுத்தி அவர் மீது மிளகாய் பொடி தூவி கம்பியால் தாக்கியுள்ளது. காரின் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த 1.5 கோடி ரூபாயை திருட முயன்றுள்ளனர்.
அவ்வழியே வந்த தனியார் ஆம்னி பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மற்றும் பயணிகள் சேர்ந்து கொள்ளையர்களை விரட்டினர்.
இதனை அடுத்து சுதாரித்துக் கொண்ட முகமூடி கொள்ளையர்கள் சுஷாந்தை தாங்கள் வந்த காரில் தூக்கிப்போட்டு அவரது காரையும் கடத்தி சென்றனர். நெடுங்குளம் தேசிய நெடுஞ்சாலை விலக்கில் திரும்பி நெடுங்குளம் கிராம குளக் கரையோரம் சுஷாந்தின் காரை நிறுத்தி அதில் இருந்த பண கட்டுகளை தங்கள் காருக்கு மாற்றிய கொள்ளை கும்பல் சுஷாந்தின் காரை அங்கே விட்டுவிட்டு தப்பி ஓடியது. இது குறித்து அப்பகுதி மக்கள் நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து (7)
இது என்ன புதுசா இருக்கு. திராவிட மாடல் விடியல் ஆட்சியில கொள்ளையடிக்கும்பொழுது யாரும் முக மூடி அணிய தேவை இல்லையே
திராவிட மாடல் ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமப்பா.
சட்டம் ஒழுங்கு சிறப்பா இருக்கு, எனவே ஜப்பான் டூர் முடிந்ததும், விரைவில் இங்கிலாந்து செல்ல இருக்கிறோம். - டீம்கா அறிக்கை.
திருநெல்வேலி நன்றாக முன்னேறி விட்டது.
காவல்துறையினருக்கு தெரியாமல் இதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை.