பஸ்சில் அரசு ஊழியரிடம் 30 சவரன் நகை அபேஸ்
வேலுார்: வேலுாரில், அரசு பஸ்சில் பயணம் செய்த அரசு ஊழியர் வைத்திருந்த பையிலிருந்து, 30 சவரன் நகை திருடு போனது.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலை சேர்ந்தவர் ராஜேஷ், 43; திருவண்ணாமலை நுகர்பொருள் வாணிபக்கிடங்கு ஊழியர்.
இவர், தன் குடும்பத்தினர் ஆறு பேருடன் நேற்று முன்தினம், வேலுார் மாவட்டம், ஆம்பூரிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். மீண்டும் அன்று மாலை, வீடு திரும்ப, வேலுார் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து, திருவண்ணாமலை செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.
அப்போது, அவர்கள் எடுத்து சென்ற பைகளை பஸ்சின் உள்ளே உள்ள லக்கேஜ் வைக்கும் பகுதியில் வைத்தனர். தண்ணீர் பாட்டில் வாங்க பஸ்சில் இருந்து ராஜேஷ் இறங்கி கடைக்கு சென்று திரும்பினார். அப்போது நகை வைத்திருந்த பை சிறிது திறந்திருந்தது.
அதிர்ச்சியடைந்த ராஜேஷ் பையை பார்த்தார். அதிலிருந்த, 30 சவரன் நகை காணாமல் போயிருந்தது. இது குறித்து ராஜேஷ் புகாரின்படி, வேலுார் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!