மின்னல் தாக்கி பெண் பலி
தென்காசி:மின்னல் தாக்கியதில், பெண் இறந்தார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பெரியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் பூமாரி, 50. நேற்று மாலை, 5:30 மணிக்கு லேசான மழை பெய்த போது, மாடு மேய்த்துக் கொண்டு இருந்த அந்த பெண், மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!