வீட்டில் புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த பெண்
திருநெல்வேலி: நெல்லை அருகே, மூதாட்டியை தாக்கி நகையை பறித்த பெண்ணை போலீசார் தேடுகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், பேட்டை அருகே திருப்பணிகரிசல்குளத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி சீதா லட்சுமி, 60. இருவரும், நேற்று காலை வீட்டில் இருந்த போது, வீட்டிற்குள் வந்த பெண், சீதாலட்சுமியை தாக்கி கீழே தள்ளி, அவர் அணிந்திருந்த 5.5 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றார். காயமடைந்த சீதாலட்சுமி, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!