ADVERTISEMENT
திருநெல்வேலி: ராதாபுரத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக பாரம் கனிம வளம் ஏற்றிச் சென்ற 11 லாரிகளை தாசில்தார் பறிமுதல் செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்திற்கு அதிக எண்ணிக்கையில் லாரிகளில் கனிம வளங்கள் ஏற்றி செல்கின்றனர். நேற்று ராதாபுரம் தாசில்தார் வள்ளிநாயகம் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பணகுடி அருகே 11 லாரிகளில் அவர்கள் பெற்றிருந்த அனுமதியை விட அதிக பாரம் கற்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தார். பணகுடி போலீசார் விசாரித்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!