மீன்பிடி தடை காலத்தால் கருவாடு விலை கிடு கிடு
ராதாபுரம்: மீன்பிடி தடைக் காலம் அமலில் இருப்பதால் கருவாடு இருமடங்கு விலை உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபலமான கருவாட்டுச் சந்தை திசையன்விளையில் உள்ளது.
இரு தாலுகா பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள், சுற்றுப்புற கிராம மக்கள், வெளியூர்களில் வசிக்கும் உறவினர்கள், நண்பர்களுக்கு இப்பகுதி சந்தையில் கருவாடு வாங்கி அனுப்பி வருகின்றனர். திசையன்விளை பகுதியில் தயாராகும் கருவாடுகள் மிதமான உப்பு, சரியான காய்வு, பக்குவம், பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பது, குறைவான விலை போன்ற பல்வேறு காரணங்களுக்காக பொது மக்கள் அதிகமாக விரும்பி வாங்கிச்செல்வது வழக்கம்.
தமிழகத்தில் முக்கிய கடற்கரை பகுதிகளான துாத்துக்குடி, ராமேஸ்வரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ராதாபுரம், திசையன்விளை வியாபாரிகள் தரமான மீன்களை வாங்கி கருவாடுகளை தயார் செய்து சந்தையில் விற்பனை செய்கின்றனர்.
விலை 'கிடு கிடு'
தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் திசையன்விளை சந்தையில் கருவாடு விலை இருமடங்கு உயந்துள்ளது. ஒரு மாதத்துக்கு முன், 100 எண்ணிக்கை கொண்ட சாளை கருவாடு 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்பட்டது. அதுவே இப்போது 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதேபோல, 250 ரூபாயாக இருந்த மஞ்சள்பாறை 500 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!