ஆம் ஆத்மி நிர்வாகி காருக்கு தீ
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவரின் கார், மர்ம நபர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர் சி.எம்.ராகவன், 51. இவர் வீடு தச்சநல்லுார், ஆனந்தாபுரத்தில் உள்ளது.
வீட்டு முன் பாதாள சாக்கடை தோண்டும் பணிகள் நடப்பதால், காரை சற்று முன்னதாக சாலையோரத்தில் நிறுத்தி இருந்தார். நேற்று முன்திம் நள்ளிரவு, 12:30 மணி வரையிலும் கார் அங்கு நின்றதை பார்த்துள்ளார்.
இரவு, 1:30 மணிக்கு கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுமையாக தீக்கிரையானது.
தச்சநல்லுார் போலீசில்ராகவன் புகார் செய்தார்.போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!