மூதாட்டிக்கு தொல்லை வாலிபர் கைது
வேலுார்:வேலுார் அருகே, மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
வேலுார், சைதாப்பேட்டையைச் சேர்ந்த, 70 வயது மூதாட்டி, தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, கதவை தாழ்ப்பாள் போடாமல் வீட்டில் துாங்கினார்.
அப்போது வந்த ஒரு வாலிபர், மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றார். அவர் சத்தமிடவே, அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்து ஓட்டம் பிடித்தார்.
வேலுார் வடக்கு போலீசார் விசாரணையில், பாலியல் தொல்லை கொடுத்தது, அதே பகுதியைச் சேர்ந்த ஜோஷ்பாட்ஷா, 20, என, தெரிந்தது. அவரை நேற்று கைது செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!