ADVERTISEMENT
திருநெல்வேலி: வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆம் ஆத்மி கட்சியின் திருநெல்வேலி மாவட்ட தலைவரின் கார் தீப்பற்றி எரிந்தது. அரசியல் முன்விரோதத்தில் மர்ம நபர்களால் கொளுத்தப்பட்டதாக போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் திருநெல்வேலி மாவட்ட தலைவர் ராகவன், 53. தச்சநல்லூர் ஆனந்தபுரம் பகுதியில் வசிக்கிறார். அவர் வீடு அருகில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதால் காரை வீட்டுக்கு முன்னதாக பொது இடத்தில் நிறுத்தி இருந்தார்.

நள்ளிரவு ஒரு மணி அளவில் திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்தவர்கள் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். ராகவன் தச்சநல்லூர் போலீசில் புகார் தெரிவித்தார். ராகவன் கூறுகையில், அரசியல் மற்றும் தொழில் போட்டியில் நள்ளிரவு ஒரு மணி அளவில் மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். இது குறித்து நான் குற்றவாளிகளின் பெயர் குறிப்பிட்டு போலீசில் புகார் அளித்துள்ளேன் என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!