Advertisement

அம்மன் நகை திருட்டு

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் அருகே ஆவரைகுளம் முத்தாரம்மன் கோயிலில் திருவிழா நடந்தது.

அம்மனுக்கு 125 பவுன் நகை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. மற்ற நாட்களில் 7 பவுன் தங்க நகை அணிவிக்கப்படுவது வழக்கம். நேர்த்திக்கடனாக 5 பவுன் நகை சேர்த்து அணிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் அங்கே பூஜைக்காக வந்தவர்கள் பூஜாரி கோயிலை சுற்றி வந்த போது, அம்மன் சிலையில் இருந்து 11 பவுன் நகைகளை திருடிச் சென்று விட்டனர்.

ஒரு பவுன் அளவிலான செயின் அம்மன் சிலையில் தங்கிவிட்டது. அங்கிருந்த கண்காணிப்பு கேமராவும் வேலை செய்யவில்லை. கொள்ளையர்கள் குறித்து பழவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement