வருமான வரித்துறை ரெய்டு அமைச்சர் நேரு கிண்டல்
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிறைவு பெற்ற பணிகளை துவக்கி வைத்தார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடியில் அவரிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் நடத்தப்படும் வருமானவரித்துறை சோதனை குறித்து கேட்டபோது 'ஏங்க... யூரின் போறது... வெளியே போறது... தண்ணீர் போறது.. லைட் போடுவது குடிசை கட்டுவது..... இது பற்றி மட்டும் என்கிட்ட கேளுங்க' என கிண்டலாக கூறிவிட்டு கிளம்பினார்.
அவருடன் வந்த கனிமொழியிடம் கேட்டபோது 'எனக்கு தெரியாது. அமைச்சருக்கு லேட் ஆகிறது' என கூறிவிட்டு அவரும் காரில் ஏறிச்சென்றார்.
'கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்த சென்ற எங்கள் துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும்.'இனி வரும் நாட்களில் இதுபோன்ற சோதனைகளுக்கு செல்லும்போது மத்திய ரிசர்வ் போலீசாரை அழைத்து செல்வதை தவிர வேறு வழியில்லை' என புதுடில்லியில் உள்ள வருமான வரித்துறை தலைமையக அதிகாரி ஒருவர் தமிழக டி.ஜி.பி.யிடம் கூறியதாக தெரிகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!