ADVERTISEMENT
அம்பாசமுத்திரம்:மாஞ்சோலைக்கு அரசு பஸ்சில் பயணம் செய்த பயணியரை வனத்துறையினர், மணிமுத்தாறு வன சோதனைச் சாவடியில் கீழே இறக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்குள் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் உள்ளது.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்குள் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் உள்ளது.
புலிகள் காப்பகத்திற்குள் வனத்துறை அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்பதால், சமீப காலமாக அரசு பஸ்களிலும், மாஞ்சோலைக்கு தொடர்பில்லாத பயணியரை வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. இதற்கு பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாஞ்சோலையை நோக்கி வந்த அரசு பஸ்சை, மணிமுத்தாறு வன சோதனைச் சாவடியில் சோதனை செய்த வனத்துறையினர் பஸ்சில் இருந்த சில பயணியரை இறக்கினர். இதனால் அதிருப்தி அடைந்த பயணியர் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அம்பாசமுத்திரம் தாசில்தார் சுமதி, கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இருதரப்பினரிடமும் பேச்சு நடத்தினர். இதையடுத்து, நிபந்தனைகளுடன் பயணியர் பஸ்சில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!