ரோந்து போலீசார் காயம்
திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, ரோந்து பணியில் ஈடுபட்டபோது, லாரி மோதி எஸ்.ஐ., உட்பட இரு போலீசார் காயமடைந்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சோலுாரில், தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு, லாரி ஒன்று பழுதாகி கொண்டிருந்தது. அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ., விஜயகுமார், போலீசார் சங்கர் ஆகியோர் ரோந்து வாகனத்தை நிறுத்தி விட்டு விசாரணை செய்ய நடந்து சென்றனர்.
அப்போது, பின்னால் வந்த லாரி போலீஸ் ரோந்து வாகனத்தில் மோதியதுடன், நடந்து சென்ற போலீசார் மீதும் மோதியது. இதில் எஸ்.ஐ., விஜயகுமார், போலீஸ் சங்கர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இருவரும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரித்துவருகின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!