அம்மன் அணிந்த நகை திருட்டு
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம் அருகே ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. அம்மனுக்கு, 125 சவரன் நகை அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.
மற்ற நாட்களில், 7 சவரன் தங்க நகை அணிவிக்கப்படுவது வழக்கம். நேர்த்திக்கடனாக, 5 சவரன் நகை சேர்த்து அணிவிக்கப்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் அங்கு பூஜைக்காக வந்தவர்கள் பூஜாரி கோவிலை சுற்றி வந்த போது, அம்மன் சிலையில் இருந்து, 11 சவரன் நகைகளை திருடிச் சென்றனர்.
ஒரு சவரன் அளவிலான செயின் அம்மன் சிலையில் தங்கிவிட்டது. அங்கிருந்த கண்காணிப்பு கேமராவும் வேலை செய்யவில்லை. கொள்ளையர்கள் குறித்து பழவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!