சிலை மீது சாய்ந்தவர் மின்சாரம் பாய்ந்து பலி
திருநெல்வேலி:துாத்துக்குடியில் அண்ணாதுரை சிலை மீது சாய்ந்தவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அதேபோல, திருநெல்வேலி மின் ஊழியர் மின்சாரம் பாய்ந்து பலியானார்.
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகே மாவடியில், மின் வாரிய லைன்மேனாக பணிபுரிபவர் சாமிதுரை, 53.
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகே மாவடியில், மின் வாரிய லைன்மேனாக பணிபுரிபவர் சாமிதுரை, 53.
மின் கம்பம் ஒன்றில் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தார்.
வியாபாரி பலி:
துாத்துக்குடி மடத்துாரை சேர்ந்தவர் ஜெயகணேஷ் 46; கீரை வியாபாரி. துாத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் மார்க்கெட்டில் கீரை வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள அண்ணாதுரை சிலை பீடத்தில் சாய்ந்து நின்ற போது, மின்சாரம் பாய்ந்தது.
உடல் கருகி அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து, துாத்துக்குடி மத்திய பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!