அனுமதியின்றி இயங்கிய பார் உட்பட 30 கடைகளுக்கு சீல்
திருவண்ணாமலை:மாவட்டம் முழுதும் அனுமதியின்றி இயங்கிய பார் உட்பட 30 மதுக் கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்வோரை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து போலீஸ், கலால் துறை மற்றும் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் இணைந்து மாவட்டம் முழுதும் அதிரடி சோதனை நடத்தினர்.
அனுமதியின்றி நடத்தப்பட்ட ஒரு பார் மூடப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டது. கடந்த மூன்று நாட்கள் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில் மது, சாராயம், கள் போன்றவற்றை திருட்டுத்தனமாக விற்ற 29 பெட்டிக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் மூடப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டன.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!