ADVERTISEMENT
பாளையங்கோட்டை: திருநெல்வேலி மாநகராட்சியில் வ.உ.சி., மைதான கூரை இடிந்து விழுந்த இடத்தில், நகராட்சிகளின் நிர்வாக தலைமை பொறியாளர் மற்றும் சென்னை அண்ணா பல்கலை தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
பாளை வ.உ.சி., மைதான பார்வையாளர் அரங்கம், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 15 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டது. செப்., 8ல் திறக்கப்பட்ட அந்த அரங்கத்தின் கூரை, நேற்று முன்தினம் பெய்த மழை, சூறாவளி காற்றில் இடிந்து விழுந்தது.

கட்டுமான பணிகளை மேற்கொண்ட நாமக்கல் ஜீ.வி., கட்டுமான நிறுவனத்திற்கு மாநகராட்சி சார்பில் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. ஏழு நாட்களுக்குள் மாநகராட்சி கமிஷனரை சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை நகராட்சிகளின் நிர்வாக தலைமை பொறியாளர் பாண்டுரங்கன் மற்றும் சென்னை பல்கலைக்கழக தொழில்நுட்பக் குழுவினர் நேற்று சம்பவயிடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ''இடிந்த கூரையை ஒப்பந்ததாரரே சொந்த செலவில் சரி செய்து தர அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
வாசகர் கருத்து (2)
கமிசனும் கொடுத்து, லாபமும் பார்க்க வேண்டும் என்றால் குத்தகைதாரர் சொந்தச்செலவில் ஓசியில்த்தான் கட்டிக்கொடுக்க முடியும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ஆட்சியாளர்கள் கட்சி அல்லக்கைகளுக்கு அழுதது போக மிச்சம் இருந்த காசில் இவ்வளவு தான் செஞ்சிருப்பார்