ஏ.டி.எம்., கொள்ளையன் சிக்கினான்
திருவண்ணாமலை:திருவண்ணாமலை ஏ.டி.எம்., மையத்தில் நடந்த கொள்ளையில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியை, துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிப்., 12ல், நான்கு ஏ.டி.எம்., மையங்களில் 72.79 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை எட்டு குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர். கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஆசீப் ஜாவேத், 30, என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

ஹரியானா- - ராஜஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ஆரவல்லி மலைப் பகுதியில் பாழடைந்த கட்டடத்தில் பதுங்கியிருந்த ஆசீப் ஜாவேத்தை, இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையிலான தனிப்படை போலீசார், துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கிருந்து அவரை தமிழகத்துக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து கைது எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.
கொள்ளையர்களிடமிருந்து இதுவரை 20 லட்சம் ரூபாய் பணம், மூன்று கார்கள், ஒரு கன்டெய்னர் லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தனிப்படை போலீசாரின் செயலை பாராட்டி, டி.ஜி.பி., சைலேசந்திரபாபு ஒரு லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!