மலேஷியா உடன் இந்திய ரூபாயில் வர்த்தகம்: வெளியுறவு அமைச்சகம்
இந்த செய்தியை கேட்க
Your browser doesn’t support HTML5 audio
புதுடில்லி: இந்தியா மலேசியா இடையிலான வர்த்தகம் இந்திய ரூபாயில் நடக்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியா - மலேசியா இடையேயான வர்த்தகம் இந்திய ரூபாயில் நடக்கும். அதேநேரத்தில், இதற்கு முன்பு இருந்த நாணய பரிவர்த்தனை முறையும் தொடரும். இந்திய ரூபாய் மூலம் சர்வதேச பணிபரிவர்த்தனை மேற்கொள்வதற்கு கடந்த 2022 ஜூலையில் இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த முயற்சியானது உலகளாவிய வர்த்தகத்தின் வளர்ச்சியை எளிதாக்குவதையும், இந்திய ரூபாயின் உலகளாவிய வர்த்தகம் நடைபெறுவதை ஆதரிப்பதையும் நோக்கமாக கொண்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (3)
நடப்பு இந்தியா அரசாங்கத்தைப் பாராட்ட வேண்டும்.. இந்திரா அவர்கள நல்ல பூகோள அரசியல் செய்தாலும் இது போன்ற நகர்வுகளை செய்ய வில்லை
அடேங்கப்பா அப்போ டாலர் டமார்தானா?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Due to irresponsible issue of USD in Treasury Bills under Quantity Easing / stimulation of economy and raising interest rates in the name of controlling inflation, USD has strengthened against world currencies and also exported inflation to others. So most countries other than US allies/European countries, want to switch to currencies like Chinese Yuan and Indian rupees. Its good for India and others.