பள்ளம் தோண்டும் பணி போக்குவரத்து மாற்றம்
சென்னை, சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், நாயர் மேம்பாலம் சிக்னலில் இருந்து, தாசபிரகாஷ் பாயின்ட் சிக்னல் இடையே, ஏப்., 1, இரவு, 10:00 மணியில் இருந்து, 4ம் தேதி காலை, 5:00 மணி வரை மழை நீர் வடிகால்வாய் கட்டும் பணிக்கு பள்ளம் தோண்டும் பணி நடக்கிறது.
இதனால், கோயம்பேடில் இருந்து, பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக, தாசபிரகாஷ் சிக்னலில் இருந்து, நாயர் மேம்பாலம் சிக்னல் நோக்கி, வாகனங்கள் நேராக செல்ல அனுமதி இல்லை.
அந்த வாகனங்கள், தாசபிரகாஷ் பாயின்ட் சிக்னல் இடதுபுறம் திரும்பி, ராஜா அண்ணாமலை சாலை வழியாக சென்று, அழகப்பா சாலை சிக்னல் வலதுபுறம் திரும்பி, நாயர் மேம்பாலம் சிக்னல் வழியாக செல்லலாம்.
நாயர் மேம்பாலம் சிக்னலில் இருந்து, தாசபிரகாஷ் சிக்னல் நோக்கி செல்லும் வாகனங்கள், எவ்வித மாற்றமும் இன்றி நேராக செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பாலம் இடிக்குதே