டூ - வீலர்கள் மோதல் 2 போலீசார் படுகாயம்
மயிலாப்பூர், புதுப்பேட்டை, ஆயுதப்படை போலீஸ்காரர் கன்னியப்பன், 36, நேற்று முன்தினம் இரு சக்கர வாகனத்தில், மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் வந்தார்.
சிட்டி சென்டர் சிக்னல் அருகே வந்த போது, எதிரில் மற்றொரு ஆயுதப்படை போலீஸ் மாதேஷ், 29, என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்தார். எதிர்பாராத விதமாக, இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில், கன்னியப்பன் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
மாதேஷ் கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெறுகிறார். அடையாறு போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!