இன்று இனிதாக (31.3.23 / வெள்ளி)
ஆன்மிகம்
வசந்த நவராத்திரி: திருஷ்டி துர்க்கா பிரத்தியங்கிரா மூல மந்திரம் சண்டி மஹாயக்ஞம் - காலை 9:00 மணி. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், மகாலட்சுமி நகர், சேலையூர்.
குரு பூஜை: முனையாடுவார் நாயனார் குருபூஜை. மாலை 6:30 மணி. இடம்: திருவேட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி.
மாலை 5:00 மணி. இடம்: முகலீஸ்வரர் கோவில், முகலிவாக்கம்.
பங்குனி பெருவிழா:கபாலீஸ்வரர் கோவில்: வெள்ளி புருஷா மிருகம், சிங்கம், புலி வாகனங்கள் - காலை 9:00 மணி. நாகம், காமதேனு, ஆடு வாகனங்கள் - இரவு, 9:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
� மல்லிகேஸ்வரர் கோவில்: காலை, பவழக்கால் உற்சவம், இரவு, நாக வாகனத்தில் சுவாமி எழுந்தருளல். இடம்: முத்தியாலுப்பேட்டை.
வேதவல்லி தாயார் புறப்பாடு: நேரம்: மாலை 5:30 மணிக்கு வேதவல்லி தாயார் புறப்பாடு. மாலை 6:00 மணிக்கு வேதவல்லி தாயார் ஆஸ்தானம். இடம்: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில்.
வெள்ளி புருஷா மிருக புறப்பாடு நேரம்: காலை 9:00 மணிக்கு பங்குனிப் பெருவிழாவில் வெள்ளி புருஷா மிருகம், சிங்கம், புலி வாகனங்கள் புறப்பாடு. இரவு 9:00 மணிக்கு நாகம், காமதேனு, ஆடு வாகனங்கள் புறப்பாடு. இடம்: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில்.
ரிஷப வாகன புறப்பாடு: நேரம்: காலை 9:00 மணிக்கு சந்திரசேகரர் தொட்டி விழா எமதருமருக்கு அருளல். இரவு 9:00 மணிக்கு, ரிஷப வாகன புறப்பாடு. இடம்: திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவில்.
ராம நவமி
பக்த ஆஞ்சநேயர் கோவில்: சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு - இரவு 7:00 மணி. இடம்: எட்டாவது தெரு, ராம் நகர், நங்கநல்லுார்.
சிவ - விஷ்ணு கோவில்: சீதாதேவி சமேத ராமருக்கு திருக்கல்யாண உற்சவம் - மாலை 6:00 மணி. இடம்: உஸ்மான் சாலை, தி.நகர் - 17.
ராமநவமி மகோற்சவம்: நேரம்: காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை லட்சார்ச்சனை பூர்த்தி. இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி புறப்பாடு. இடம்: நங்கநல்லுார், ஆஞ்சநேயர் கோவில்.
வைகுந்தம் - நாமாலயம்: சுந்தர காண்ட பாராயணம் - காலை 10:30 முதல், 12:00 மணி வரை. ஹரிகதா காலசேஷபம்: ராம நாம மஹிமை - சிந்துஜா சந்திரமவுலி குழுவினர் - மாலை, 6:30 மணி. இடம்: ஆன்மிகம், கலை, கலாசார, பாரம்பரிய மையம், சேலையூர் - 73.
ராம ஆஞ்சநேயர் கோவில்: ராம நாம சங்கீர்த்தனம்: செங்கல்பட்டு சத்குரு பஜனை மண்டலியினர் - மாலை 5:00 மணி. இடம்: அனுமந்தராயன் கோவில் தெரு, திருவல்லிக்கேணி.
ஒப்பிலியப்பன் பட்டாபிஷேக ராமர் கோவில்: வேத பிரபந்த சாத்துமறை - மாலை 6:30 மணி. இடம்: ராம் நகர் வடக்கு, மடிப்பாக்கம்.
சொற்பொழிவு
கம்ப ராமாயணம்: ராம ஜனனம் - நடராஜன் ஷியாம் சுந்தர், மாலை 6:45 மணி. இடம்: வரசித்தி விநாயகர் சேவா டிரஸ்ட், நியூ காலனி, ஆதம்பாக்கம்.
ஸ்ரீமத் ராமாயணம்: விஸ்வாமித்திர யாக சம்ரக் ஷணம் - கே.வீ.ஸ்ரீதரன், இரவு 7:00 மணி. இடம்: மகா சக்தி விநாயகர் கோவில், பொன்னுசாமி தெரு, ராயப்பேட்டை.
பொது
தமிழிசை விழா: இசைக் கல்லுாரி ஆண்டு விழா. தலைமை: கவின் கலை பல்கலை துணைவேந்தர் சவுமியா, சிறப்புரை: கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் காந்தி, நிகழ்வு: மாலை. இடம்: சென்னை அரசு இசைக் கல்லுாரி, ஆர்.ஏ.,புரம்.
பாராட்டு விழா: 'தேசியக்குயில் டி.கே.பட்டம்மாள்' நுாலாசிரியர் தாமல் கோ.சரவணனுக்கு பாராட்டு விழா. தலைமை: சிவாலயம் ஜெ.மோகன், வாழ்த்துரை: முனைவர் சாரதா நம்பிஆரூரன், அவ்வை அருள், சிறப்புரை: சு.கி.சிவம், மாலை 5:00 மணி. இடம்: ரசிக ரஞ்ஜனி சபா, மயிலாப்பூர்.
பொன்னியின் செல்வம் எஸ்.டி.சோமசுந்தரம் நுாற்றாண்டு விழா. நேரம்: மாலை 5:00 மணி. இடம்: மியூசிக் அகாடமி, சென்னை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!