Advertisement

வைத்தீஸ்வரன்கோவிலில் பிரமோற்சவ விழா

மயிலாடுதுறை: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் வைத்தியநாத சாமி கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நாய் ஓட்டம் நரி ஓட்டம் எனும் யானை ஓடி விளையாடும் வைபவம் சிறப்பாக நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிவிலல் தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட அருள்மிகு தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் முதன்மையான செவ்வாய் ஸ்தலமாகவும், மேலும் சித்த மருத்துவத்தின் தலைவரான தன்வந்திரியும் தனி சன்னிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில் பிரமோற்சவ விழா கடந்த 27 ல்கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான இன்று முருகபெருமானின் தந்தையாகிய வைத்தியநாதசுவாமியும், தாயாகிய தையல்நாயகி அம்மனும் தீர்த்த வாரிக்காக வீதியுலா செல்லும் போது ஆலயத்தில் தனியாக இருக்கும் முருக பெருமானுக்கு விளையாட்டு காட்டுவதற்காக யானை ஓடிவந்து வணங்கி விளையாடுவது ஐதீகம்.
பிரம்மோற்சவ விழாவின் மூன்றாவது நாளான இன்று(மார்ச் 30 ) பரிவாரங்களுடன் அம்பாள் சுவாமி தீர்த்தவாரிக்கு புறப்பட்டனர். சுவாமிகள் வீதியுலா செல்லும் வரை அமைதியாக நிற்க்கும் யானை, பின்னர் முருக பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளும் போது அதிவேகமாக ஓடி, மீண்டும் திரும்பி ஓடிவந்து சப்தம் எழுப்பியவாறு முருகபெருமானை வணங்கியது.
நாய் ஓட்டம் நரி ஓட்ட வைபவம் என்று அழைக்கப்படும் யானை ஓடும் இக்காட்சியை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.அதனை தொடர்ந்து அஸ்திரதேவர், விநாயகர், அம்பாள், சண்டிகேஸ்வரர் வீதியுலா நடைபெற்றது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement