கடவுள் ராமர் இந்தியாவின் அடையாளம்: ராஜ்நாத் சிங்
இந்த செய்தியை கேட்க
ராமநவமியை முன்னிட்டு, தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்தரங்கில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு பிரம்மாண்டமான கோவில் கட்டுவதற்கான நிலை உருவான போது பலரும் பல்வேறு விதமான யோசனைகளை கூறினர். அந்த இடத்தில் மருத்துவமனை கட்ட வேண்டும் என்றும், பள்ளிக்கூடம் அமைக்கலாம் என்றனர். வேறு சிலரோ அங்கு தொழிற்சாலை அமைக்கலாம் என யோசனை கூறினர். இவர்கள் அனைவரும் கடவுள் ராமரை புரிந்து கொள்ளாதவர்கள்.

கடவுள் ராமர் கல் அல்லது மரத்தில் உருவான வெறும் சிலை அல்ல. அவர் இந்த நாட்டின் கலாசாரத்தின், நம்பிக்கையின் மையம். நாம் மருத்துவமனை கட்டுவோம். பள்ளிக்கூடம் கட்டுவோம். தொழிற்சாலைகள் அமைப்போம். அதுபோலவே ஆலயங்களையும் எழுப்புவோம். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
வாசகர் கருத்து (13)
மத அரசியல் செய்யும் கும்பல்.
இது கடவுள் ராமருக்கு தெரியுமோ? அவர் காலத்தில் இந்தியாவே கிடையாதாமே, அதான் கேட்டேன்.
இந்தியா ஒரு புண்ணிய பூமி. இங்கே பலரும் பிழைக்க வந்து கொள்ளையடித்து நமது கலாச்சாரத்தை சீரழிக்க வந்தவர்கள். பலகோவில்களை இடித்து அங்கிருந்த ஏராளமான சொத்துக்களை அள்ளிச்சென்ற கும்பல்கள். அவர்களை இன்னும் பின்பற்றுவோரும் உண்டுதான். மதமாற்றம் செய்து நாட்டின் பாரம்பரியத்தை சீர்குலைத்துவிட்டு விதைத்தும் சென்றார்கள். உலகத்திலேயே அதிகமாய் நமது இந்துமத கடவுள்களின் சிலைகளைத்தான் பூமியை தோண்டும்போது புதையலை போன்று எடுக்கின்றார்கள். ராமன் ஒரு ஒப்பற்ற தெய்வம். வாழ்வின் ஒழுக்கத்தை போதித்தவர். இந்த பூமி உள்ளவரை அவரது போதனைகள் எல்லா தலைமுறைகளையும் தாண்டி புதிதாய் இருக்கும்.
அவரும் தன்னோட ஆதார் கார்டையும், பான் கார்டையும் இணைக்கணுமா? ஏன் கேக்குறேன்னா, திருப்பதி ஏழுமலையானுக்கே அவரோட வெளிநாட்டு பக்தர்களின் உண்டியல் வசூலுக்காக உங்க புதிய வருமானவரி சட்டத்தின் கீழே 4.33 கோடி அபராதம் போட்டு வசூலித்த பெருமையா உள்ளவர்களாச்சே நீங்கள்.
இராமர் மற்றும் கிருட்டிணர் ஆரிய அடையாளம். இந்திய அடையாளம் அல்ல. நிச்சயமாக தமிழர் அடையாளம் அல்ல. உன் மதத்தை இங்கே திணிக்காதே.