10 நாட்களில் நடந்தது 41 கோவில் கும்பாபிஷேகம்
தி.மு.க., - கோவி செழியன்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் தொகுதி, துக்காச்சியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விக்கிரம சோழன் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தவும், கல்வெட்டுகளை பாதுகாக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: கோவில் திருப்பணி 5.50 கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாதத்துக்குள், கும்பாபிஷேகம் நடத்தப்படும். கடந்த 20ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, 574 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருந்தது. கடந்த 10 நாட்களில், 41 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில், கல்வெட்டுகள் சரி செய்யப்படும்.

கோவி செழியன்: திருவிடைமருதுார் தொகுதியில், சூரியனார் கோவில், கஞ்சனுார் கோவில், மகாலிங்க சுவாமி கோவில் என ஏராளமான கோவில்கள் உள்ளன. ஆனால், பக்தர்கள் தங்கி செல்ல பாதுகாப்பான இல்லம் இல்லை. எனவே, தங்கும் விடுதிகள் அமைத்து தர வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: நாகநாதசுவாமி கோவிலில், 8.90 கோடி ரூபாய் செலவில், கூடுதலாக பக்தர்கள் தங்கும் விடுதி கட்ட உத்தேசித்துள்ளோம். தேவை என்றால் கும்பாபிஷேகம் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க., - பிரபாகர் ராஜா: சென்னை கோயம்பேடில் அமைந்துள்ள, குறுங்காலீஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட வைகுண்ட பெருமாள் கோவிலுக்கு, ஐந்து நிலை கோபுரம் அமைக்க வேண்டும். திருத்தேர் வழங்க வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: இந்த ஆண்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!