வெறுப்பு பேச்சை தடுக்க சுப்ரீம் கோர்ட் யோசனை
வெறுப்பு பேச்சுகள் தொடர்பான வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
நேற்று நடந்த விசாரணையின்போது, நீதிபதிகள் கே.எம். தாமஸ், பி.வி. நாகரத்தினா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளதாவது:
வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக எத்தனை எத்தனை வழக்குகள் உள்ளன. இந்தப் பேச்சுகள் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்காதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் அதிகளவில் உள்ளன.
எத்தனை பேர் மீது தான் நடவடிக்கை எடுப்பது? இந்தப் பிரச்னைக்கு தீர்வு தான் என்ன?
சக 'குடி'மகன் மீது, மற்ற சமூகத்தினர் மீது அவதுாறாகப் பேச மாட்டோம் என்ற உறுதிமொழியை ஏன் ஒவ்வொரு இந்தியரும் எடுத்துக் கொள்ளக் கூடாது?
ஒவ்வொரு நாளும் 'டிவி' விவாதங்கள், பொது நிகழ்ச்சிகளில், மற்ற சமூகத்தினர் குறித்து அவதுாறாக பலர் பேசி வருவதை பார்த்து வருகிறோம். இதற்கெல்லாம் எப்போது முடிவு ஏற்படும்?
இதுபோன்று உணர்வுப் பூர்வமாக துாண்டிவிடுவோரிடம் இருந்து, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.அரசியலையும், மதத்தையும் பிரித்து விட்டால், அரசியலில் மதத்தைப் பயன்படுத்துவதை அரசியல்வாதிகள் நிறுத்திவிட்டால், வெறுப்பு அரசியல் பிரச்னை மறைந்துவிடும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
வாசகர் கருத்து (6)
Not the solution. Rahuls hate speech is noton religiosity grounds. DELAYED JUDGEMENTS AND FLAWED RULES ARE THE MAIN CAUSE. Another general election is nearing. What has Judiciary done to eliminate criminals?
நம்முது செக்கூலர் நாடு தெரியுமோன்னோ.
தாய் மதத்தை அழிக்க வந்தேறி மதத்தினர் நினைக்கும் பொது இது நடக்கின்றது. நீதிகளின் பேச்சில் நேர்மை இல்லை
பூனைக்கு யார் மணி கட்டுவது?
மதம் மற்றும் குறிப்பாக ஹிந்துக்களுக்கான எதிரான செய்லகளை முதலில் செய்ய ஆரம்பித்தது திமுக மற்றும் கம்யூனிஸ்டுகள்.. அவர்களின் ஆதரவுடன் கிருத்துவ மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் அரசியல் நபர்கள் அதிகளவில் ஹிந்து மதத்தையும் ஹிந்துக்களை, ஹிந்து கடவுள்களையும் இழிவு படுத்துதல் மற்றும் வெளிப்படையாக தாக்வும் ஆரம்பித்தனர்.. இவையேல்லாம் நீதிமன்றங்கள் கண்டும் காணாமல் இருந்தது கடந்த 70 வருடங்களாக நடந்துவருகிறது.. இப்போது திடீரென்று நீதிமன்றங்கள் குதிப்பதை பார்த்தால், அவர்களும் எதோ அழுத்தத்தில் உள்ளது தெளிவாக தெரிகிறது.