பள்ளி ஆண்டு விழா கலைநிகழ்ச்சி அசத்தல்
உடுமலை: எலையமுத்துார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்களின் கலைநிகழ்ச்சியுடன் ஆண்டுவிழா நடந்தது.
உடுமலை அருகே, எலையமுத்துார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டு விழாவில் ஊராட்சித்தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் ஜனகம் வரவேற்றார்.
ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்கமணி, ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனர். கல்வியாண்டில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!