அண்ணாமலைக்கு பதில் தர தயார்
ஈரோடு:''பா.ஜ.,வில் பிரச்னைகள் உள்ளன. அதிலிருந்து வெளி வரவே, தி.மு.க.,வினர் மீது அண்ணாமலை புகார் கூறி வருகிறார். அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தயாராக இருக்கிறோம்,'' என, தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா ஈரோடில் நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா ஈரோடில் நடந்தது.
அப்போது அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:
குடும்ப தலைவியருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படும் என, தேர்தல் வாக்குறுதியில் என்ன கொடுக்கப்பட்டதோ, அதே தான் அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஏப்., 14ல் இரு துறை அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை வெளியிட போவதாக அறிவித்துள்ளார்.
அண்ணாமலை குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா, இல்லையா என, ஏற்கனவே விளக்கம் கூறியிருக்கிறோம்.
அக்கட்சியில் பல பிரச்னைகள் உள்ளன. அதிலிருந்து வெளி வரவே அண்ணாமலை இப்படி கூறி வருகிறார். அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கவும் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!