ADVERTISEMENT
அந்தியூர்:சென்னம்பட்டி வனத்தில், யானைகள் மோதலில், ௩௦ வயது ஆண் யானை பலியானது.
ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி வனப்பகுதி, உள்ளுர்தண்டா வனச்சரகத்தில், நேற்று முன்தினம் மாலை, சென்னம்பட்டி வனத்துறையினர் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில், ஒரு ஆண் யானை இறந்து கிடந்தது.

அதைப்பார்த்த வனத்துறையினர், ஈரோடு மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அறிவுறுத்தலின்படி, அரசு கால்நடை மருத்துவர்கள், அதே இடத்தில் யானைக்கு உடற்கூறு பரிசோதனை செய்து, யானையை புதைத்தனர்.
இறந்த யானை, ௩௦ வயதான ஆண் யானை என்றும், யானைகள் சேர்ந்து தாக்கியதில் இறந்திருக்கலாம் எனவும், டாக்டர்கள் தெரிவித்தனர்.
தமிழக வனத்தில் மின் விபத்தில் சிக்கி தொடர்ந்து யானைகள் உயிரிழந்து வரும் நிலையில், தற்போது யானைகளிடையே நடந்த மோதலில் ஒரு ஆண் யானை உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!