கொங்கு கலை கல்லூரியில் கொங்கு உத்சவ் 2 கே 23
ஈரோடு: ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில், 'கொங்கு உத்சவ் 2 கே 23' பெயரில், தேசிய அளவிலான கல்லுாரி கலாசார விழா நடந்தது.
மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்கும் பொருட்டு நடந்த விழாவை, கல்லுாரி தாளாளர் தங்கவேல் தொடங்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் ராமன் வாழ்த்துரை வழங்கினார்.
மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்கும் பொருட்டு நடந்த விழாவை, கல்லுாரி தாளாளர் தங்கவேல் தொடங்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் ராமன் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில், 60க்கும் மேற்பட்ட கல்லுாரிகளை சேர்ந்த, 600 மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர். தனி, நடனம், தனிப்பாடல், குழு நடனம், இசைக்கு ஏற்ற நடனம், மெகந்தி உள்ளிட்ட ஏழு போட்டிகள் நடந்தன.
சிறப்பு விருந்தினராக விஜய் டி.வி., கலக்கப்போவது யார் போட்டி வெற்றியாளர் முகமது குரைஷி பங்கேற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
அதிக புள்ளிகளை பெற்ற மதுரை லேடிடோக் கல்லுாரி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பை வென்றது. நிகழ்வில் அறக்கட்டளை பாரம்பரிய உறுப்பினர்கள், பல்வேறு துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் விழாவில் திரளாக கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!