தி.மு.க., மேற்கு மாவட்ட கூட்டத்தில் கூடுதலாக உறுப்பினர் சேர்க்க முடிவு
இடைப்பாடி: தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், வைகுந்தத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார். அதில் மாவட்ட செயலர் செல்வகணபதி, கட்சி வளர்ச்சி, கட்சியில் கூடுதலாக புது உறுப்பினர்களை சேர்ப்பது, பூத் கமிட்டி அமைப்பது, கருணாநிதி நுாற்றாண்டு விழா, சார்பு அணிகளின் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் நியமிப்பது குறித்து பேசினார்.
தொடர்ந்து, கருணாநிதி நுாற்றாண்டு விழா; பூத் கமிட்டி அமைப்பது; கட்சியில் கூடுதலாக உறுப்பினர்கள் சேர்ப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேட்டூர், இடைப்பாடி, சங்ககிரி சட்டசபை தொகுதிகளின் பூத் கமிட்டி தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!