ADVERTISEMENT
தென்காசி:தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வீரகேரளம்புதுார் தாலுகா அச்சம்குட்டத்தில் நத்தம் புறம்போக்கில் சர்ச் கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 88 பேர் கைது செய்யப்பட்டனர்.
அச்சம் குட்டம் அரசு புறம்போக்கு நிலத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள போவதாக கலெக்டரிடம் அனுமதி பெற்ற சிலர் அங்கு புதிதாக சர்ச் கட்டுமான பணிகளை துவக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். காலையில் கைதானவர்கள் மாலை வரை விடுவிக்கப்படவில்லை.

ஹிந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன்பின் கைதானவர்கள் மாலை விடுவிக்கப்பட்டனர். சர்ச் கட்டுமான பணிகள் நடந்தால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராமத்தினர் தெரிவித்தனர். இன்று வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்போவதாகவும் கிராமத்தினர் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!