ADVERTISEMENT
சேலம்:''பிரதமரை இழிவு செய்வதாக நினைத்து, ஒரு சமுதாயத்தை ராகுல் இழிவுபடுத்தி விட்டார்,'' என, மத்திய ரயில்வே இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் தெரிவித்தார்.
மத்திய ரயில்வே, ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ், சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று ஆய்வு செய்தார்.
மத்திய ரயில்வே, ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ், சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது 'அம்ரித் பாரத்' திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள், 'ஒரு பொருள், ஒரு ரயில் நிலையம்' திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டார்.
அவர் கூறியதாவது:
ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டு, நாடு முழுதும் சரக்கு போக்குவரத்து அதிகரித்து வருகிறது. பிரதமரின், 'கதி சக்தி' திட்டத்தில், பல்வேறு இடங்களில் சரக்கு முனையம் மேம்படுத்தப் பட்டுள்ளதால், சரக்கு போக்குவரத்து அதிகரித்து உள்ளது.
பிரதமரை இழிவுபடுத்துவதாக நினைத்து காங்., முன்னாள் தலைவர் ராகுல், ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தி விட்டார். இது கண்டிக்கத்தக்கது. ராகுல் தரப்பு நியாயத்தை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண வேண் டும். அதற்கு பதிலாக பார்லிமென்ட்டில் அமளியில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!