ADVERTISEMENT
திருநெல்வேலி:துாத்துக்குடி ஆவின் நிறுவன நிதி முறைகேடு புகாரில், துணை பொது மேலாளர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
திருநெல்வேலி ஆவின் பால் பண்ணையில் இருந்து தினமும், திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங் களுக்கு, 75 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் 'சப்ளை' செய்யப்படுகின்றன. சமீபகாலமாக ஆவின் பால் பாக்கெட்டுகள் சப்ளையில் பற்றாக்குறை ஏற்பட்டது.

சில நாட்களுக்கு முன் கூடுதல் துணை மேலாளர் ஜோஸ்பினா ஆய்வு செய்ததில், பால் பண்ணையில் இருந்து பால் பாக்கெட்களை ஏற்றிச் செல்லும் வேன்களில் அதிகப்படியாக, 209 லிட்டர் பால் பாக்கெட்டுகள், தயிர் பாக்கெட்டுகள் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக, ஊழியர்கள் ஆசைத்தம்பி, ஷேக் மன்சூர், டிரைவர் அருண், ரமேஷ் கைது செய்யப்பட்டனர். கையாடல் தொடர்பாக உதவி பொது மேலாளர் ஜான் சுனில் 'சஸ்பெண்ட்'செய்யப்பட்டார்.
திருநெல்வேலி துாத்துக்குடி ஆவின் நிறுவனங்களில் தொடர் விசாரணை நடந்தது. இதில், துாத்துக்குடியில் நடந்த நிதி முறைகேடு புகாரில், துணை பொது மேலாளர் ஸ்ரீரங்கதுரை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!