சாக அனுமதிக்க வேண்டும்: மாஜி” டிரைவர் பரபரப்பு
திருநெல்வேலி: விஷம் குடித்து சாக அனுமதிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக டிரைவர் கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு அளித்தார்.
சாந்திநகரை சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக டிரைவர் ஆறுமுகம் அளித்த மனுவில், கடந்த 2016ம் ஆண்டில் இருந்து அகவிலைப்படி நிலுவை தொகை வழங்கப்படவில்லை.
ஆனால் அரசின் பிற துறைகளுக்கு இத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனால் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, என்னை விஷம் குடித்து சாக அனுமதிக்க வேண்டும். அதன் பின்பாவது ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி நிலுவை, மருத்துவ காப்பீடு வசதி செய்யும் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!