பற்களை பிடுங்கும் பல்வீர்சிங் ஏ.எஸ்.பி., விசாரணை குறித்து புகார்
திருநெல்வேலி,:திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் கைதானவர்களை விசாரிக்கும் போது பற்களை பிடுங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2020 பேட்ச் ஐ.பி.எஸ்., அதிகாரியான பல்வீர்சிங் அம்பாசமுத்திரத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் ஏ.எஸ்.பி.,யாக பணிபுரிகிறார்.
2020 பேட்ச் ஐ.பி.எஸ்., அதிகாரியான பல்வீர்சிங் அம்பாசமுத்திரத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் ஏ.எஸ்.பி.,யாக பணிபுரிகிறார்.
குற்றங்களில் ஈடுபட்டு கைதாகும் நபர்களை இவர் விசாரிக்கும் போது குறடு மூலம் பற்களை பிடுங்குவதாகவும், பிறகு கூழாங்கற்களை வாயில் போட்டு மெல்ல செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அயன்சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா போதையில் தெருவில் இருந்த 'சிசிடிவி' கேமராக்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.
ஏ.எஸ்.பி., மற்றும் போலீசார் அவரது பற்களை பிடுங்கியதாக நேதாஜி சுபாஷ் சேனை நிர்வாகி மகாராஜன் புகார் தெரிவித்தார்.
திருநெல்வேலி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,''பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள் இதுகுறித்து புகார் தெரிவிக்கவில்லை. புகார் வந்தால் விசாரிக்கப்படும்,'' என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!