தூத்துக்குடிமாவட்டம் விளாத்திகுளத்தில் மதுரை ரோட்டில் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான ராஜலட்சுமி ஜூவல்லரி உள்ளது.
நேற்று முன்தினம் இரவில் கேஸ் வெல்டிங் மூலம் கடை ஷட்டரை உடைத்து உள்ளே சென்ற இருவர் லாக்கரையும் வெல்டிங் மூலம் உடைத்து அதில் இருந்த 13 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் என 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்தனர். கடையிலிருந்து வெளியே வந்தபோது அதுகுறித்து அந்த பகுதி வாட்ச்மேன் போலீசுக்கு தெரிவித்தார். போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய கேஸ் வெல்டிங் சாதனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதில் கைதான மாரிமுத்து 34, வள்ளிநாயகபுரத்தை சேர்ந்தவர். தூத்துக்குடியில் கார் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்தார்.
மற்றொருவர் அவரது உறவினரான மார்த்தாண்டம்பட்டி முத்துகிருஷ்ணன் 36, என்பவர் உள்ளாட்சியில் கொசு மருந்து அடிக்கும் வேலை செய்து வந்தார்.
போலீசில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேறு பெயர்களில் ஒரு கட்சியின் அடையாள அட்டையை இவர்கள் வைத்திருந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!