ADVERTISEMENT
திருநெல்வேலி:காலி 'பிளாஸ்டிக்' பாட்டிலுக்கு ஒரு ரூபாய் வழங்கும் திட்டத்தை திருநெல்வேலி மாநகராட்சி அமல்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியில் ஆங்காங்கே பிளாஸ்டிக் காலி பாட்டில்களை கால்வாய்கள், ஓடைகளில் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே பாட்டில்களை பொது இடங்களில் வீசுவதை தடுக்கவும் அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் மாநகராட்சி முடிவு செய்தது. காலி பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் ஒன்றை கொடுத்தால் ஒரு ரூபாய் வழங்கும் திட்டம் திருநெல்வேலி மாநகராட்சியில் நேற்று முன் தினம் அமல்படுத்தப்பட்டது.
முதற்கட்டமாக தச்சநல்லுாரில் இந்தத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!