திருச்செந்துார் அருகே 52 சவரன் கொள்ளை
திருச்செந்துார்:திருச்செந்துார் அருகே இன்ஜினியர் வீட்டின் பூட்டை உடைத்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 52 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடுகின்றனர்.
திருச்செந்துார் அருகே வீரபாண்டியன்பட்டினம் முத்து நகரைச் சேர்ந்த சுந்தர மாரியப்பன், 35. உடன்குடி அனல் மின் நிலைய இன்ஜினியர். கடந்த 21ம்தேதி வேலைக்குச் சென்று விட்டு மாலையில் துாத்துக்குடி சென்றுவிட்டார். அதற்கு மறுநாள் இரவு, முத்துநகரில் உள்ள வீட்டுக்கு வந்தார்.

வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 52 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளயடிக்க ப்பட்டு இருந்தது. அதன் மதிப்பு 20 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
இதுகுறித்து சுந்தர மாரியப்பன் கொடுத்த புகார்படி, திருச்செந்துார் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!