போதை டிரைவரால் தள்ளாடிய அரசு பஸ்
துாத்துக்குடி:துாத்துக்குடியில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ்சை மது போதையில் டிரைவர் ஓட்டியதால் தாறுமாறாக சென்ற பஸ் நிறுத்தப்பட்டது.
துாத்துக்குடி புது பஸ் - ஸ்டாண்டில் இருந்து மதுரைக்கு 22ம் தேதி இரவு 7:40 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டுச் சென்றது. துாத்துக்குடியை சேர்ந்த டிரைவர் ராமகிருஷ்ண ராஜா பஸ்சை ஓட்டிச் சென்றார். அதில் 16 பயணியர் இருந்தனர். திடீரென பஸ் தாறுமாறாக சென்றது.

அதிர்ச்சியடைந்த பயணியர் அலறினர். கண்டக்டர் சென்று பார்த்தபோது டிரைவர் மது போதையில் இருப்பது தெரிந்தது. துாத்துக்குடி அருகே புதுார் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே பஸ் நிறுத்தப்பட்டது. துாத்துக்குடி பணிமனை மேலாளருக்கு கண்டக்டர் தகவல் கொடுத்தார். பயணியர் வேறு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து 'டிப்போ'மேலாளரிடம் கேட்டபோது, 'பணி நேரத்தில் போதையில் இருந்த டிரைவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.
பணி நேரத்தில் மது அருந்திய டிரைவர் மீது புதியம்புத்துார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!