ரூ.54.98 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை, :ஐக்கிய அரபு நாடான துபாயில் இருந்து, எமிரேட்ஸ் விமானம் நேற்று முன்தினம் சென்னை வந்தது.
சந்தேகம் அளிக்கும் வகையில், முனையத்தை விட்டு வெளியேற முயன்ற பயணி ஒருவரை, சுங்க அதிகாரிகள் இடைமறித்து சோதனை செய்தனர்.
அப்போது, அவரது ஆசனவாயில் மூன்று பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை வெளியே எடுத்து ஆய்வு செய்ததில், 54.98 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1,070 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது.
தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், பயணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!