ADVERTISEMENT
குன்றத்துார், :குன்றத்துார் அடுத்த, கொளப்பாக்கம் ஊராட்சி மணப்பாக்கம் பிரதான சாலையில், பிரபலமான சாமியார் குளம் உள்ளது.
கடந்த 2021ல், அப்பகுதி மக்கள், தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள் உதவியுடன் குளக்கரை சுற்றி இரும்பு கம்பி தடுப்புகள், நடைபாதை கற்கள் பதித்து, சுற்றுச்சுவர் அமைத்தனர்.
புனரமைக்கப்பட்ட இந்த சாமியார் குளம், இரண்டு ஆண்டுகள் கூட முடிவடையாத நிலையில், கொளப்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், புதர்மண்டியும், குளம் முழுதும் ஆகாயத்தாமரை வளர்ந்தும் காணப்படுகிறது.
இதனால், துர்நாற்றம் வீசீ வருகிறது. மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாக குளப்பகுதி மாறியுள்ளது. குடித்து விட்டு, மது பாட்டில்களை குளத்தில் வீசி செல்கின்றனர்.
சமூக விரோத செயல்கள்நடக்காமல் தடுத்து, குளத்தை சீரமைத்து தர வேண்டும் தடுக்க வேண்டும், பகுதி என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!