ADVERTISEMENT
பெரும்பாக்கம்மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சி இந்திரா நகரில், காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், கங்கை அம்மன், குண்ணாத்தம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் புதிய மூலவர் சிலை, திருப்பணிகள் மற்றும் புனரமைப்பு வேலைகள் முடிந்து, மஹா கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் கடந்த 21ம் தேதி துவங்கின.
தொடர்ந்து, நேற்று காலை 7:00 மணிக்கு, விக்னேஷ்வர ஆராதனையுடன் பூஜை துவங்கப்பட்டு, கலசப் புறப்பாடு முடிந்து, காலை 9:00 மணிக்கு, மூலவர் குண்ணாத்தம்மன், விசாலாட்சி, மீனாட்சி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது.
பரங்கிமலை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலர் ராஜசேகர், பெரும்பாக்கம் ஊராட்சி தலைவி சுஹாசினி, ஜெயா நகர் கிளைக்கழக அ.தி.மு.க., செயலர் தயாளன் உள்ளிட்டோர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!