Advertisement

 தாம்பரத்தில் நிற்காத விரைவு ரயில்களால்...ஏமாற்றம்!:தென் மாவட்ட பயணியர் காத்திருந்து அவதி

சென்னை:எழும்பூரில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் ஒன்பது விரைவு ரயில்கள், இருவழிப் பாதையில், தாம்பரத்தில் நிற்காமல் செல்வதால், பயணியர் பயணத்தை தவற விட்டு, பல்வேறு சிரமங்களையும் சந்திக்கின்றனர்.

தாம்பரம் ரயில் நிலையம், சென்னையின் மூன்றாவது முனையமாக உள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, தாம்பரம் வழியாக, 25 தினசரி விரைவு ரயில்கள், 22 வாராந்திர விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மேலும், தாம்பரத்தில் இருந்து எழும்பூர் வழியாக, ஆந்திரா மற்றும் வட மாநிலத்திற்கு, ஐந்து விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுபோக, சிறப்பு கட்டணம் மற்றும் கோடைக்கால சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

தாம்பரம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள், நங்கநல்லுார், பல்லாவரம், பரங்கிமலை, மடிப்பாக்கம், குரோம்பேட்டை, மேடவாக்கம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லுார், போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள், விரைவு ரயில் ஏற, தாம்பரம் ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.

ஆனால், எழும்பூரில் இருந்து தாம்பரம் வழியாக செல்லும் ஒன்பது விரைவு ரயில்கள், தாம்பரத்தில் நிற்பதில்லை.

இதில், ஏழு ரயில்கள் வட மாநிலத்தில் இருந்தும், இரண்டு ரயில்கள் எழும்பூரில் இருந்தும் புறப்படுகின்றன. எழும்பூரில் புறப்படும் ஒன்பது ரயில்களில், ஆறு ரயில்கள் செங்கல்பட்டு நிலையத்தில் நிற்கும்; மூன்று ரயில்கள், விழுப்புரம் நிலையத்தில் தான் நிற்கும்.

அனைத்து ரயில்களும் தாம்பரத்தில் நிற்கும், அதில் ஏறலாம் என எதிர்பார்த்து முன்பதிவு செய்வோர், ஏமாற்றம் அடைகின்றனர். அதேபோல், ஒன்பது ரயில்களும் எழும்பூர் நோக்கி வரும்போதும், தாம்பரத்தில் நிற்பதில்லை.

செங்கல்பட்டு அல்லது எழும்பூரில் இறங்கி, மின்சார ரயில் அல்லது பேருந்தில், அவரவர் இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால், பயணம் முடித்து குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் பயணியர் ஏமாற்றம் அடைகின்றனர்.

எழும்பூரில் புறப்பட்டு திருச்சியில் நிற்கும் தேஜாஸ் ரயில் கூட, தாம்பரத்தில் இரண்டு நிமிடம் நிற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதே போல, பல ஆண்டுகளாக இயக்கப்படும் ஒன்பது விரைவு ரயில்களையும், தாம்பரத்தில் நின்று செல்லும் வகையில், ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

வட மாநிலங்களில் இருந்து தாம்பரம் வழியாக செல்லும் ஒன்பது விரைவு ரயில்களும், எழும்பூரில் 20 முதல் 30 நிமிடம் வரை நிற்கின்றன. ஆனால், முக்கிய நிலையமான தாம்பரத்தில், இரண்டு நிமிடம் கூட நிற்பதில்லை. இதனால், போட்டித் தேர்வு, நேர்காணல், சுபநிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல், பலர் ஏமாற்றம் அடைகின்றனர். சென்னை சாலைகளில், வாகன நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பிட்ட நேரத்தில், எழும்பூர் ரயில் நிலையம் செல்வது சிரமம். இதனால், ஒன்பது விரைவு ரயில்களையும், தாம்பரத்தில் ஒன்று அல்லது இரண்டு நிமிடம் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- விரைவு ரயில் பயணியர்

தாம்பரத்தில் நிற்காத விரைவு ரயில்கள்


எண் ரயில் பெயர் கிழமை நிற்கும் நிலையம்20896 புவனேஸ்வர்- - ராமேஸ்வரம் சனி விழுப்புரம்12898 புவனேஸ்வர் -- பாண்டிச்சேரி புதன் செங்கல்பட்டு22536 பனாரஸ்- - ராமேஸ்வரம் செவ்வாய் செங்கல்பட்டு22404 புதுடில்லி - -புதுச்சேரி செவ்வாய் விழுப்புரம்20973 அஜ்மிர் - -ராமேஸ்வரம் திங்கள் செங்கல்பட்டு07695 ஹைதராபாத் - -ராமநாதபுரம் வியாழன் செங்கல்பட்டு22614 அயோத்தியா- - ராமேஸ்வரம் வெள்ளி விழுப்புரம்12667 எழும்பூர் - -நாகர்கோவில் வியாழன் செங்கல்பட்டு22623 எழும்பூர்- - மதுரை ஞாயிறு/வெள்ளி செங்கல்பட்டு



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement