தீபாவளி சீட்டு நடத்தி நஷ்டம் கணவர் தற்கொலை; மனைவி கவலை
பெருங்களத்துார்:தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்துார், சூராத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த்பாபு, 38. பெரம்பலுாரில் உள்ள ஐ.சி.எப்.,பில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார், அவரது மனைவி தேவி, 36. அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
கணவன், மனைவி இருவரும் தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர். அதில், 80 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதால், சீட்டு போட்டவர்களுக்கு பொருட்கள், பணத்தை திருப்பித் தர முடியாமல் தவித்து வந்தனர்.
கணவன், மனைவி இருவரும் தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர். அதில், 80 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதால், சீட்டு போட்டவர்களுக்கு பொருட்கள், பணத்தை திருப்பித் தர முடியாமல் தவித்து வந்தனர்.
இதனால், மன உளைச்சலில் இருந்த இருவரும், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தனர்.
அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, '108' ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
அங்கு, சிகிச்சை பலனின்றி ஆனந்த்பாபு இறந்தார். தேவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!