ADVERTISEMENT
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், புலிவாய் கிராமத்தில், விவசாய நிலங்களையொட்டி அமரக்குளம் என்ற பெயரில் ஒரு ஏக்கர் பரப்பில் பொதுக்குளம் அமைந்துஉள்ளது.
இக்குளத்தை சுற்றி 150 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களில் நவரை பருவத்திற்கு ஏரி பாசனம் மற்றும் சொர்ணாவாரி பட்டத்திற்கு கிணற்று பாசனம் மூலம் விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர்.

கோடைக்காலத்தின் போது, இப்பகுதி விவசாய நிலங்களுக்கு அருகாமையில் உள்ள அமரக்குளம் நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
அமரக்குளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. எனினும், குளம் முழுமையாக துார் வாராமல் குளத்தின் கரைப்பகுதி மட்டும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இக்குளத்தில் போதுமான தண்ணீர் தேக்கமின்றி கோடைக்காலத்தில் விரைந்து வறண்டு போகிறது.
எனவே, புலிவாய் கிராமத்தில் உள்ள அமரக்குளத்தை துார்வாரி ஆழப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!