இதனால், மழை காலங்களில் காமாட்சியம்மன் கோவில் சன்னிதி தெரு கிழக்கு பகுதியான, பழைய ரயில் நிலையம் நுழைவாயில் பகுதியில், குளம் போல மழை நீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது.
இதனால், ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணியர் மட்டுமின்றி, பேருந்து நிலையம், பூக்கடை சத்திரம், வையாவூர், கோனேரிகுப்பம் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மழை நீரில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதில், வேகமாக செல்லும் வாகன ஓட்டிகளால் பாதசாரிகளின் ஆடைகளில் சேற்று நீர் தெளிப்பதால், சாலையில் நடந்து செல்வோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இருசக்கர வாகனத்தின் 'சைலன்சருக்குள்' மழை நீர் புகுந்து விடுவதால், வாகனங்களும் பழுதடைந்து விடுகின்றன.
இதனால், மழை காலத்தில் ரயில் நிலையம் அருகில் தேங்கும் மழை நீரை, நெடுஞ்சாலைத் துறையினர் நீர் உறிஞ்சும் லாரி வாயிலாக அப்புறப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.
இதற்கு நிரந்த தீர்வாக ரயில் நிலையம் வளாகம் வழியாக, மழை நீர் வெளியேறும் வகையில் 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு, தற்போது துார்ந்த நிலையில் உள்ள கால்வாய் மற்றும் சிறுபாலத்தை துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் விஜய் கூறியதாவது:
மழை நீர் வெளியேறும் வகையில், துார்ந்த நிலையில் கால்வாய் உள்ள பகுதி ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமானது. இதனால், மாற்று ஏற்பாடாக காமாட்சியம்மன் கோவில் சன்னிதி தெருவில் இருந்து, ரயில்வே சாலையில் உள்ள மழை நீர் வடிகால்வாயில் மழை நீர் வெளியேறும் வகையில் புதிதாக கால்வாய் அமைக்கப்பட உள்ளது. இப்பணி இரு மாதங்களில் துவக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!