தி.நகர் பத்மாவதி தாயார் தரிசன நேரம் அறிவிப்பு
சென்னை:தி.நகர், திருமலை திருப்பதி தேவஸ்தான பத்மாவதி தாயார் கோவில் தரிசன நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, தி.நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில், பத்மாவதி தாயார் கோவில் எழுப்பப்பட்டு, சமீபத்தில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
சென்னை, தி.நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில், பத்மாவதி தாயார் கோவில் எழுப்பப்பட்டு, சமீபத்தில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இக்கோவில், மண்டல பூஜைகள் நடந்து வரும் நிலையில், கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, காலை 5:00 மணி முதல் 5:30 மணி சுப்ரபாத தரிசனம். 6:30 மணிக்கு ஆராதனை. அப்போது, தரிசனம் கிடையாது. காலை 6:30 மணி முதல் 7:00 மணிவரை சகஸ்ர அர்ச்சனை தரிசனம்.
காலை 7:30 மணி முதல் 11:30 மணி; மதியம் 12:00 மணி முதல் 2:30 மணி; மாலை 3:30 மணி முதல் 5:00 மணி; மாலை 5:45 மணி முதல் இரவு 9:00 மணி வரை, பக்தர்கள் சர்வ தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
இடைப்பட்ட நைவேத்திய நேரத்தில், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தை உள்ள தம்பதியர், திருமணம் முடித்த அன்றே வரும் மணமக்கள் அனைவருக்கும் நேரடி தரிசனம் உண்டு.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!