இவ்வாறு, அடுத்தடுத்து நீரோட்டத்தின் திசை மாற்றமடையும். திசை மாற்றம் நிகழும் போது, கடற்கரை மணற்பரப்பு அரிக்கப்பட்டு, கடல் நீர் சில மாதங்கள் நிலத்தில் உட்புகும்.
அப்போது, முற்றிலும் கடற்கரை அழிந்து, படகுகள் நிறுத்த இடமின்றி மீனவர்கள் பாதிக்கப்படுவர்.
சில மாதங்கள் கடந்து ஏற்படும் நீரோட்ட மாற்றத்தில், கடல் உள்வாங்கி, கரையில் மணல் குவிந்து, மீண்டும் மணற்பரப்பு உருவாகும்.
மாமல்லபுரத்தில், சில மாதங்களுக்கு முன், நிலத்தில் கடல் நீர் புகுந்து, தொடர்ந்து நீடித்தது. தற்போது, நீரோட்டத்தின் திசை மாற்றம் காரணமாக, கடல் உள்வாங்கி, மீண்டும் மணல் குவிக்கப்பட்டு மணற்பரப்பு உருவாகியுள்ளது.
வாசகர் கருத்து (3)
பூமியின் வடக்கிலும் தெற்கிலுமுள்ள இரு துருவங்கள் வருட சுழற்சியில் உயர்ந்தும் தாழ்ந்தும் சுற்றுவதால் கடல் நீர் சரிவு ஏற்படலாம். .
இடமிருந்து வலமாக பூமி சுழற்சியில் வருடத்தின் பின் ஆறுமாதங்கள் சிம்மம் முதல் மகரம் வரை வடக்கிலிருந்து தெற்கு பக்கம் பூமி சாய்ந்து நகர்வதால் கடல் நீர் தெற்கில் புரளும். அதே போல் வருடத்தின் முன் ஆறு மாதங்கள் அதாவது மாசி கும்பம் முதல் கடகம் ஆடி வரைக்கான கோடை காலத்தில் பூமி எதிர் பக்கம் சாய்ந்து நகர்வதால் கடல் நீர் தெற்கிலிருந்து வடக்கில் புரளும்.இந்த கடல் நீர் திசை மாற்ற சுழற்சி பூமியின்அனைத்து கண்டங்களிலும் இருக்கும்.
கடலுக்குள் நீரோட்டம் இருக்காது.தேங்கிய நீரில் நீரோட்டம் எப்படி எங்கிருந்து வரும்அதை விளக்க வேண்டாமா. காக்கா கருப்பு.கடல் தண்ணி உப்பு. கடலுக்குள் நீரோட்டம் இருந்தால் கடல் நீர் ஏன் உப்பு கரிக்கிறது.